மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு பெருநகர புறவழிச்சாலை அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் 28 வயது இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்த நிலையில் அந்த காரில் பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் ஒருவர் இருந்துள்ளார். அவருடன் சேர்ந்து மொத்தமாக மூன்று பேர் அந்த காரில் இருந்தனர். அவர்கள் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்ற நிலையில் அந்தப் பெண்ணுக்கு மதுபானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தனர். பிறகு மூன்று பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பிறகு மைதான பகுதியில் காரை நிறுத்திய அந்த பெண்ணை இறக்கிவிட்டு மூன்று பேரும் தப்பிச் சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தொலைபேசி தேடி வருகிறார்கள்.
