தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அரசியல் பயணம் 2026 தேர்தல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது. இதில் முக்கியமாக செங்கோட்டையன் TVK வில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்ற 3 முக்கிய புள்ளிகள் போட்டிப்போட்டவுள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, அதிமுகவைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, தவெகவைச் சேர்ந்த செங்கோட்டையன் ஆகிய 3 பேரும் கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர். மூன்று பேருக்குமே அங்கு செல்வாக்கு அதிகளவு இருக்கும் நிலையில், அதிக மக்களை தன்வசம் இழுக்கப்போவது யார்? என்ற போட்டி நிலவி வருகிறது. இதில், செந்தில் பாலாஜி, செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றுஎதிர் அணியில் உள்ளனர்.
