தமிழகத்தில் டிட்வா புயல் எதிரொலியால் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த ரேணுகா என்ற 20 வயது பெண் தனது ஓட்டு வீடு மழையால் சேதம் அடைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து வீட்டில் தூங்கி உள்ளார். ஆனால் இவரது வீடு இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்ததில் ரேணுகா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
