இவர்களுக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது… தமிழக அரசு ஷாக் நியூஸ்….!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர். இதுவரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களின் விவரம் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பயனாளர்களின் வங்கி கணக்கில் முதலில் ஒரு ரூபாய் அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டிசம்பர் 15 முதல் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த பட்டியலில் இடம்பெறாத குடும்பத் தலைவிகளுக்கு இந்த முறை பணம் கிடைக்காது என தெரிகிறது. உடனே உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் வந்ததா என்று செக் பண்ணுங்க.