திடீர் திருப்பம்…. ஸ்டாலின் தொகுதியில் விஜய் போடும் அதிரடி திட்டம்… அனல் பறக்கும் அரசியல் களம்…!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக கூட்டணியை பலப்படுத்திக் கொண்டு வெற்றியை பெறுவதற்கு பல வியூகங்களை வகுத்து வருகிறார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வெற்றி வாகை சூட விஜய் பலகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் தொழிலதிபர் பாலாஜியை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. YBM டிராவல்ஸ் அதிபரான இவர் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகியாகவும் உள்ளார். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரம் அழைத்து வர ஒருங்கிணைத்ததுடன் 5 omni பேருந்துகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். அத்துடன் கொளத்தூரில் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவரை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.