தமிழக கடலோர மாவட்டங்களை ஆட்டிப்படைக்கும் டிட்வா புயலின் வேகமானது தற்போது அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயலானது தற்போது 10 கி.மீ வேகத்தை அடைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 350 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ , வேதாரண்யத்தில் இருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏற்கெனவே கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
