உரிமை உள்ளிட்ட அனைத்தையும் அன்புமணி பறித்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்று பேசிய அவர், “என் உயிரை மட்டும் தான் எனது மகன் அன்புமணி இன்னும் பறிக்கவில்லை.
சூழ்ச்சியால் “பாமகவின் தலைவர் நான்” என்று அன்புமணி கூறிக்கொண்டிருக்கிறார். நான் வயிறு எரிந்து சொல்கின்றேன் உன் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல் தான் பாமக வளர்ச்சி அடையும் என்று சாபம் விட்டுள்ளார்.
