திடீர் திருப்பம்…. செங்கோட்டையனுக்கு துணை முதல்வர் பதவி?… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களமும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட செங்கோட்டயன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் அனுபவம் கொண்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளது கட்சிக்கு ஒரு திடமான அரசியல் அடித்தளத்தை அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று செங்கோட்டையன் நிபந்தனை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.