விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! ரூ.40,000 வருமானம் ஈட்டலாம்…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!

By Devi Ramu on கார்த்திகை 30, 2025

Spread the love

மத்திய அரசின்  பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்‌ஷா எவம் உத்தன் மகாபியான்  திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.40,000 வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், விவசாயிகளுக்குச் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்களை அமைத்து, நீர்ப்பாசனச் செலவைக் குறைத்து, அவர்களை ஆற்றல் உற்பத்தியாளர்களாக மாற்றுவதுதான்.

இத்திட்டத்தில் சூரிய ஒளி பம்ப்செட் அமைக்க 60% வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு 30% மற்றும் மாநில அரசு 40% வரை (மொத்தம் 70% வரை) கூடுதல் மானியம் வழங்குகிறது.

   

இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம். விவசாயிகள் தங்கள் தேவைக்குப் போக மீதமுள்ள சூரிய மின்சாரத்தை தமிழ்நாடு அரசுக்கு விற்பனை செய்யலாம். அதற்கான தொகையானது மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.40,000 வரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

   

மானியம் போக மீதமுள்ள 40% பங்குத் தொகை செலுத்த முடியாதவர்களுக்குக் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற அரசு ஏற்பாடு செய்கிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையம் அல்லது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (TEDA) மூலம் விண்ணப்பிக்கலாம்.