தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செங்கோட்டையன் சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அண்ணனின் அரசியல் அனுபவம், கட்சிக்கு நல்ல பயன் தரும் என்று நினைக்கும் விஜய் செங்கோட்டை எனக்கு உச்சபட்ச மரியாதையை கொடுத்து வருகின்றார். தனக்கு அடுத்த இடத்தில் தற்போது இருக்கின்ற ஆனந்தை புதுச்சேரிக்கு பொறுப்பாளராக போட்டு அங்கே கட்சியை வலுப்படுத்த அனுப்பலாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் கட்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் போல செங்கோட்டையன் தன்னுடைய அரசியலுக்கு மையப்படுத்த முடிவெடுத்துள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் கூறுகின்றனர்.
இதுவரை விஜய் நினைத்தால்தான் அவருடன் யாரும் பேச முடியும், தொடர்பு கொள்ளவும் முடியும் என இருந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. செங்கோட்டையன் தன்னை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம் என்று விஜய் கூறியுள்ளார். அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் அஞ்சலி செலுத்தி விட்டு தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர வேண்டும் என்று நினைத்த செங்கோட்டையனை அங்கே சென்றாள் மீடியாக்காரர்கள் துரத்துவார்கள், கட்சியில் சேர்ந்த பிறகு போகலாம் என்று விஜய் தரப்பிலிருந்து கூறப்பட்டதால் செங்கோட்டையன் அப்படி செய்தாராம். கட்சியில் இணைந்துவிட்டு சமாதிகளுக்கு போனது செங்கோட்டையனுடன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அனுப்பி வைத்த விஜய் பெரிய தொண்டர் பட்டாளத்தை அனுப்பி அவரை குஷிப்படுத்தி விட்டார்.
இது ஒரு பக்கம் இருக்க செங்கோட்டையன் கட்சியில் இணைந்தது பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது, கட்சியில் இல்லாத ஒருவரைப் பற்றி பேசமாட்டேன் என்று பதில் அளித்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்கவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டத்தை விட மூன்று மடங்கு கூட்டத்தை கூட்ட நிர்வாகிகளுக்கு கட்டளை இட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் கோபிசெட்டிபாளையத்திலும் செல்வாக்கில்லாதவர் செங்கோட்டையன் என்று தனக்கு கூடுகிற கூட்டத்தின் மூலம் நிரூபித்து பதிலடி கொடுப்பதற்கு இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
இவர் அவ்வாறு திட்டமிட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி போலவே செங்கோட்டையனும் கோபிசெட்டிபாளையத்திற்கு விஜயை அழைத்து வந்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்துள்ளதாக விஜய் இடம் சொல்ல அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ஒழுங்குபடுத்தப்படாத கூட்டம் என்று விமர்சிக்கப்படும் விஜய் பிரச்சார கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி கட்டுப்படுத்தி பட்டுக்கோட்டை கூட்டம் என்று நிருபிக்க விஜயின் கோபி பிரச்சாரத்தை பயன்படுத்திக்கொள்ள செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்த பிறகு கோபி சென்ற செங்கோட்டையனுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.
