தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த ஜொல்லபட்டி கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ள நிலையில் மூத்த மனைவிக்கு சரவணன் (32) என்ற மகனும், இரண்டாவது மனைவிக்கு கோவிந்தராஜ் என்ற மகனும் உள்ளன. இதய ஜெய்சங்கர் 2 மனைவிகளுடன் குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். சரவணன் படித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்று திரிந்து வந்த நிலையில் குடி போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்துடன் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு இரவு வீட்டுக்கு சென்ற சரவணன் அவருடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்த சித்தி அதாவது தந்தையின் இரண்டாவது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஜெய்சங்கர் தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த கோவிந்தராஜ் சரவணனை கண்டித்துள்ளார். இருந்தாலும் அடங்காத சரவணன் குடிபோதையில் அனைவரையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயசங்கர் மற்றும் கோவிந்தராஜ் இருவரும் சேர்ந்து சரவணன் அங்கிருந்த செங்கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிறகு அவருடைய உடலை போர்வையில் சுற்றி வீட்டில் வெளியில் வீசிவிட்டு மூவரும் எதுவும் தெரியாதது போல படுத்து உறங்கினர். காலையில் சரவணனின் உடலை பார்த்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தந்தையின் இரண்டாவது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதால் பெற்ற தந்தையே மகனை அடித்து கொன்றது தெரியவந்தது. மேலும் ஜெயசங்கர், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
