டிட்வா புயல் டெல்டா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வருவதால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை கருதி கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையை முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட இருப்பதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வி ஆண்டு நாள்காட்டியில் நவம்பர் 29ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தான். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும். மேலும் மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அதுபோல எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
