“உன் கூட வாழவே எனக்கு பிடிக்கல, இத கூட சரியா பண்ண மாட்டியா”… தாய் வீட்டில் விட்டு சென்ற கணவன்… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் விகாரபத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த கஞ்சி மல்லம்மா- சாயப்பா தம்பதியின் இளைய மகள் சிரிஷா (21). இவருக்கும் நல்லமோனி கூடத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே சிரிஷாவுக்கு சரியாக சமைக்க தெரியவில்லை என்றும் தன்னைவிட குறைவாக படித்துள்ளார் என்று கூறியும் சிவலிங்கம் அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த 25ஆம் தேதி இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சிரிஷாவை அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு சென்றுவிட்டனர் .

நடந்த விஷயங்களை கேட்ட பெற்றோர் தங்கள் மகளை சமாதானப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கணவரை சிரிஷா செல்போனில் தொடர்பு கொண்ட நிலையில், நீ எனக்கு அவசியமில்லை என்ற சிவலிங்கம் திட்டி உள்ளார். இதனால் மனமடைந்த சிரிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.