நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். நீண்ட தூரம் மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். ஆனால் ஒருசிலரோ சென்னை புறநகர் ரயில்களில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, சாகசம் செய்வது மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற புகார்கள் அடிக்கடி எழுந்துவந்து நிலையில் ரயில்வே நிர்வாகம் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இடையூறு ஏற்படுவதைத் தடுக்கவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
