சென்னைக்கு 560 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 460 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் டிட்வா புயலானது மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை நெருங்கும்போது இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
