உலகளவில் வெளியான பட்டியல்…! டெல்லியை ஓரம்கட்டி பெங்களூரு பிடித்த இடம்…! என்ன தெரியுமா…?

By Devi Ramu on கார்த்திகை 28, 2025

Spread the love

கனடாவைத் தலைமையிடமாகக் கொண்ட ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம், உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாச் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களின் அடிப்படையில், 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களை மதிப்பீடு செய்து, இந்தப் பட்டியல் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான பட்டியலில், உலக அளவில் லண்டன் முதலிடத்திலும், நியூயார்க் இரண்டாம் இடத்திலும், பாரிஸ் மூன்றாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன. இந்திய நகரங்களில், பெங்களூரு 29வது இடத்திலும், மும்பை 40வது இடத்திலும், டெல்லி 54வது இடத்திலும், ஐதராபாத் 82வது இடத்திலும் உள்ளன. பெங்களூரு நகரமானது, அங்குள்ள தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பெரு நிறுவனங்களின் விரிவாக்கம் போன்ற காரணங்களுக்காக இந்தச் சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.