தமிழகத்தில் துரோகத்தை வீழ்த்துவதற்கு மூன்றாவது பெரிய அணி உருவாகி வருவதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி டிடிவி தினகரன், தமிழக வெற்றி கழகம் கட்சியில் செங்கோட்டை இணைந்தது குறித்து கேட்கப்பட்டது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தன்னுடன் பேசிய போது செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவது பற்றியோ சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவது குறித்தோ எந்த ஒரு தகவலும் என்னிடம் கூறவில்லை.
தமிழக மக்களுக்கு தெரியும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் கட்சியினருக்கும் நன்றாகவே தெரியும் செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது யாருக்கு பலவீனம் என்று. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மிகுந்த வருத்தத்திலேயே இருந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தான் செங்கோட்டையனுக்கு துரோகம் செய்துள்ளார். துரோகத்தை வீழ்த்துவதற்கான காலம் வரும். வருகின்ற தேர்தல் அதற்கான பதிலாகவே இருக்கும்.
தமிழகத்தில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மூன்றாவதாக மிகப்பெரிய கூட்டணி அமையும். அதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். தற்போது செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படும் நிலையில் தற்போது மூன்றாவதாக மிகப்பெரிய கூட்டணி அமைவது குறித்து டிடிவி தினகரன் கூறியுள்ளது அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளது.
