சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா..? விஜய் கட்சியில் செங்கோட்டையன் இணைவு… ஒத்த வார்த்தையில் நச் பதில் கொடுத்த ரஜினி…!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் MLA பதவியை சபாநாயகர் முன்பாக நேற்று ராஜினாமா செய்துவிட்டு இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இது தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதன்படி ஜெயிலர் 2 படம் குறித்த கேள்விக்கு, படம்  நல்லபடியாக போய்க்கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்கள் படப்படிப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். அதைனைத் தொடர்ந்து விஜய்யின் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நோ கமெண்ட்ஸ்’ என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.