உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பகுதியில் தனது ஒரு தலை காதலுக்கு மறுப்பு தெரிவித்த 24 வயது இளம்பெண்ணை அவருடைய உறவினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் அளித்த தகவலின் படி கொலை செய்யப்பட்டவர் தீபிகா திவாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த கிராமத்திற்கு திரும்பிய தீபிகா கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாயாக உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் இன்று காலை தீபிகாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அஜித்குமார் மிஸ்ரா என்பவர் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
அஜித் குமார் மிஸ்ரா தன்னுடைய தாய் மாமாவின் மகளான தீபிகா மீது ஒருதலை காதலில் இருந்து வந்துள்ளார். தீபிகாவிற்கு திருமணமாகியும் அவருடன் உறவு வைத்துக் கொள்ளும்படி அஜித் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் தீபிகா அவருடைய விருப்பத்தை மீண்டும் மீண்டும் நிராகரித்த நிலையில் ஆத்திரத்தில் அவர் கொலை செய்ய திட்டமிட்டு தீபிகாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது ஒன்றரை வயது குழந்தை தாய் இல்லாமல் தவிக்கும் சோகம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
