பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளிகளில் மாதம் தோறும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் காக்கா முட்டை எனும் படம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 2014 இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் பற்றிய கதை.
இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது .அதற்குரிய பாட வேலைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் .பொறுப்பாசிரியர் படம் திரையிடுவதற்கு முன்பாக அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன் பிறகு கதை சுருக்கத்தை படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணி விளக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
