MGR வாக்கு வங்கியை குறிவைக்கும் தவெக?… செங்கோட்டையனை வைத்து அதிமுக கோட்டையை பிடிக்கும் விஜய்….!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை தலை தூக்கி உள்ளது. தனக்கு எதிராக குரல் கொடுக்கும் முக்கிய நிர்வாகிகளை இபிஎஸ் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கிவரும் நிலையில் இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் வாக்குகள் அனைத்தும் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்த செங்கோட்டையன் சற்றுமுன் விஜயை சந்தித்து தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவதை உறுதி செய்துள்ளார். தன்னை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசி என எப்போதும் கூறிவரும் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவதன் மூலம் எம்ஜிஆர் காலத்து அதிமுக வாக்குகளை பெறுவதோடு தேர்தல் வியூகங்களையும் சிறப்பாக வகுக்க முடியும் என்று விஜய் தரப்பு நம்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்