தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி அவரது திமிரை நாம் அடக்க வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியில்தான் பஹல்காம் தாக்குதல், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு ஆகியவை நடந்துள்ளது. தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத அரசை ஆளுநர் புகழ்ந்து பேசுகிறார்” என கூறினார்.
