உலகளவில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண், தாய், தந்தை, உடன் பிறந்தவர், மாமன் உள்ளிட்ட நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார் என்று ஐ.நா. அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கும் 137 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். 2024ஆம் வருடத்தில் மொத்தம் 83,000 பெண்கள்-சிறுமிகள் கொல்லப்பட்ட நிலையில், அவர்களில் 60% பேர் (சுமார் 50,000) நெருங்கிய உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
பெண்களை ஒப்பிடுகையில் ஆண்களில் குடும்பத்தினரால் கொல்லப்படுவது 11% மட்டுமே என அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே பெண்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் போதாது, அதில் அதிக தீவிரம் காட்டப்பட வேண்டும் என்று ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 50,000 பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் அவர்களது காதலர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
