இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் குழந்தைகளின் தேவைகள் மற்றும் பெற்றோரின் கட்டுப்பாடுகள் இடையே உருவாகும் முரண்பாடுகள் பல குடும்பங்களில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகின்றன. நாக்பூரில் நடந்த இந்த சோக சம்பவம் இளம் வயதினரின் மனநிலையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது. மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டம் சங்கப்பூர் பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தன்னுடைய பெற்றோரிடம் புதிய செல்போன் வாங்கி தருமாறு பலமுறை கேட்டுள்ளார். நான் பெற்றோர் அதனை ஏற்காததால் சிறுமி மனவிரத்தி அடைந்துள்ளார்.
பெற்றோர் தனது கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்ததால் வருத்தம் அடைந்த 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று வீடு திரும்பிய தாயும் மூத்த சகோதரியும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
