டெல்லி பிரேம் நகர் பகுதியில் ஆறு வயது சிறுவனை நாய் ஒன்று தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 23, ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி, அதன் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவில், குழந்தை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரரின் பிட் புல் திடீரென தாக்கியது காட்டப்பட்டுள்ளது.
A 6 year old child was playing in Delhi.
A Pit Bull dog of neighbour attacked him brutally. The child lost his ear and is admitted in Hospital.
Dog Lovers who give excuse that dog attacks because they are hungry. Was this pet dog Hungry?
Pit Bull dogs should be banned in India… pic.twitter.com/DlykkE50Hc
— Ankur Singh (@iAnkurSingh) November 25, 2025
இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாய் அவரது வலது காதைக் கடித்து குதறியுள்ளது. சிறுவனின் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாயின் தாடைகளிலிருந்து சிறுவனை விடுவித்தனர். அந்த நாய் ராஜேஷ் பால் என்ற 50 வயது நபருக்கு சொந்தமானது.
