“உங்க அராஜகம்லாம் எங்க கிட்ட வேண்டாம்”… எங்கள பாத்து திமுகவுக்கு அவ்வளவு பயமா?… செந்தில் பாலாஜியை எச்சரித்த பிரேமலதா…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

கோவையில் தேமுதிகவின் கூட்டத்திற்கு திமுகவினர் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக பிரேமலதா கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இப்போ நான் இங்கே வந்து அமர்ந்ததிலிருந்து கழக நிர்வாகிகள் எல்லாம் என் காதில் சொல்வது, எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினாங்க என்று கூறுகின்றனர். நான் இன்று தமிழ்நாடு முழுவதும் போய் வந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கே தெரியும் தென் மாவட்டத்தை எல்லாம் முடிச்சு மதுரையிலிருந்து இன்னைக்கு கோவைக்கு வந்துள்ளேன். அங்கெல்லாம் காவல்துறையினரும் சரி பொதுமக்களும் சரி கட்சிக்கு உற்ற நண்பர்களாக இருந்தனர். பக்க பலமாக இருக்கின்றனர்.

ஆனால் கோவையில் மட்டும் என்ன வித்தியாசம்? யாருக்காவது வித்தியாசம் தெரிகிறதா? நான் கண்டுபிடித்து விட்டேன். உள்ளே வரும்போது நீங்கள் என் காதில் சொல்லும் போதே நான் கண்டுபிடித்து விட்டேன். கொங்கு மண்டலத்தில் யார் இன்று பொறுப்பாளர்? தமிழ்நாடு முழுக்க போய் வந்து விட்டேன். ஏன் கோவையில் மட்டும் இந்த அராஜகம், தேமுதிகவை பார்த்து உங்களுக்கு பயமா, நீங்கள் எங்கள் பேனரை எடுத்துவிட்டு கொடியை எடுத்துவிட்டு தொல்லை கொடுத்தீர்கள்? அப்படி செய்தால் இந்த மீட்டிங் நடக்காதா? சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? அந்த அளவிற்கு பயப்படுகின்ற கூட்டம். இதை யார் செய்தார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. பத்திரிக்கையாளர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் உங்கள் வேலையெல்லாம் தேமுதிக விடம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பிரேமலதா கோபமாக பேசியுள்ளார்.