ஐயோ நெஞ்சே பதறுது… ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கடந்த நர்சிங் மாணவர், மாணவி… வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

பெங்களூர் சிக்கப்பனவரா ரயில் நிலையத்தின் அருகே இளம் பெண் மற்றும் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் பலகாவிலிருந்து பெங்களூரு நோக்கி வந்த வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பலியானவர்கள் கேரளாவில் உள்ள பத்திரம் திட்டா பகுதியை சேர்ந்த ஜஸ்டின் ஜோசப் (20), ஸ்டெர்லின் எலிசா ஷாஜி (19) என்பதும் இருவரும் நண்பர்களாக பழகி வந்ததும் தெரியவந்துள்ளது.

இருவரும் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் மதியம் வெளியில் சென்றவர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளியே சென்று விடுதிக்கு திரும்பும் வழியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தார்களா அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.