மக்களே…! “SIR உதவி மையம்” இன்றே கடைசி நாள்… உடனே கிளம்பி போங்க….!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பல இடங்களிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உதவி மையம் இன்றோடு முடிவடைகிறது. படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் நான்காம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே SIR விண்ணப்பம் இன்னும் கொடுக்காதவர்கள் இன்று சென்று வேலையை முடித்துக் கொள்ளுங்கள்.