தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கட்சியில் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீக்கிவரும் இபிஎஸ் சமீபத்தில் செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை நீக்கினார். தற்போது அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நால்வர் அணியாக பிரிந்து நிற்கின்றனர். அதன்படி சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோருடைய அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தல் பற்றி டிசம்பர் 15ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் அதற்குள் திருத்துங்கள் என்ற இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கெடு விதித்துள்ளார். ஆனால் உண்மையில் இது இபிஎஸ் காண கெடு அல்ல என்று கூறப்படுகிறது. அதாவது ஒத்த கருத்துடையவர்களை இணைத்து NDA கூட்டணியில் மீண்டும் சேர ஓபிஎஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரனிடம் இன்னும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதனால்தான் டிசம்பர் 15ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் கூறுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
