நாடே அதிர்ச்சி… 211 மருந்துகள் தரமற்றவை… மொத்த லிஸ்டையும் வெளியிட்ட மத்திய அரசு… உடனே செக் பண்ணுங்க…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த மருந்துகளில் காய்ச்சல், சளி தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தப்படும் சுமார் 211 மருந்துகள் தரமற்றவை எனவும் ஐந்து மருந்துகள் போலியானது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதனை பார்வையிடலாம். அதேசமயம் தரமற்ற மருந்து உற்பத்தி செய்த நிறுவனங்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் மக்கள் மேற்கண்ட இணையதளத்தில் போலி மற்றும் தரமற்ற மருந்துகளை கண்டறிந்து அதற்கு ஏற்றது போல மருந்துகளை வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள.