“ஐயோ அம்மா எரியுது காப்பாத்துங்க”…. மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த கணவன்… பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய 2 மனைவிகள்…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த மலவத் மோகன் (42) என்ற கூலி தொழிலாளியான இவருக்கு கவிதா, சங்கீதா என்ற இரண்டு மனைவிகள் உள்ளன. மதுப்பழக்கத்திற்கு அடிமையான மோகன் தினமும் குடித்துவிட்டு வந்த இரண்டு மனைவிகளையும் துன்புறுத்தியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த மோகன் இருவரையும் சரமாரியாக தாக்கி வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு சென்றார். பிறகாக்கும் பக்கத்தினர் உதவியுடன் இருவரும் வீட்டிற்கு வெளியே மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்த நிலையில் காலையில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வீட்டில் வைத்திருந்தனர்.

அவர்கள் திட்டமிட்டபடி இரவு மது அருந்திவிட்டு வந்த மோகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பாட்டிலில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதனால் அலறி துடித்த மோகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள இரண்டு மனைவிகளையும் தொலைபேசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.