கூலாக வேடிக்கை பார்த்த விஜய் சேதுபதி…. சாண்ட்ராவை கதற விட்ட பிக் பாஸ்…. இந்த நடிப்புக்கு அவார்ட் கொடுக்கலாம் போலயே…!!

By Devi Ramu on கார்த்திகை 24, 2025

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 49ஆம் நாளை நிறைவு செய்து 50-ஆம் நாளை எட்டியதையடுத்து, தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். “யாரெல்லாம் இவ்வளவு நாட்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பெரும்பாலானோர்  ரம்யா, சாண்ட்ரா, பிரஜின் உள்ளிட்டோரின் பெயர்களை கூறியுள்ளார். இதில் ரம்யா பெயர் அதிகமாகச் சொல்லப்பட்டதால் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

பின்னர் விஜய் சேதுபதி, நாமினேஷன் டிஸ்கஸ் குறித்துக் கேள்விகளை முன்வைத்தார். இந்த வார எவிக்ஷனுக்காக, வீட்டுக்குள் இரண்டு கார்கள் கொண்டு வரப்பட்டன. அதில் கெமி ஒரு காரிலும், பிரஜின் இன்னொரு காரிலும் ஏறி வெளியே செல்ல வேண்டும் என்றும், அதில் ஒருவர் மட்டுமே திரும்பி வருவார், வராதவர் வெளியேற்றப்படுவார் என்றும் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.

   

பிரஜின் வெளியேறும்போது சாண்ட்ரா கதறி அழுதபடி அவருடன் செல்ல முயன்றார். ஐந்து நிமிடங்கள் கழித்து பிரஜின் திரும்பி வந்ததும், சாண்ட்ரா உணர்ச்சிவசப்பட்டு மயங்கி விழுந்தார். இறுதியில், இந்த வாரம் கெமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

சாண்ட்ரா பிரஜினுடன் ‘கப்பிள் கேம்’ விளையாடுகிறார் என்று விக்ரம் விமர்சித்த நிலையில், எவிக்ஷன் நேரத்தில் சாண்ட்ரா அதிகப்படியாக உணர்ச்சிவசப்பட்ட விதத்தை பார்த்து ரசிகர்கள் சாண்ட்ரா ஓவர் ஆக்டிங் செய்வதாக சோஷியல் மீடியாவில் கமென்ட் செய்து வருகின்றனர்.