சற்றுமுன் புதிய திருப்பம்… 2026 தேர்தல் கூட்டணி… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்…!

By Nanthini on கார்த்திகை 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. மக்களை சந்திக்கும் வேலைப்பாடுகளும், கூட்டணி குறித்த பேச்சு, தொகுதி பங்கீடு என தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. திராவிட கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்களுடைய கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வருகின்றன. பாமகவில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக மற்றும் கூட்டணியை இதுவரை வெளியிடாமல் உள்ளது. திமுக பிரச்சாரத்தில் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமாரும் பிரேமலதாவும் சந்தித்து பேசியதால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் நடந்த பிரச்சாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் பிரேமலதா விஜயுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல் வெளியானது.

ஆனால் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை பிரேமலதா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்தின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தேமுதிக கட்சி உருவானது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக முத்திரை பதிக்கும். தேமுதிக இடம் பெறும் கூட்டணியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும். தற்சமயம் கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட முடியாது. உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்