தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு இந்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் விஜய் தங்கல் கட்சியில் இணைத்து விட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இதனைத் தவிர இதர கட்சிகளையும் தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக மற்றும் திமுகவை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளும் மாற்று கட்சியினரை இணைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளன. அந்த வகையில் இன்று சென்னை அம்பேத்கர் திடலில் நடந்த இணைப்பு விழாவில் சென்னை, திருவள்ளூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திருமாவளவன் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு 500 பேர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த நிலையில் தற்போது மேலும் 500 பேர் இணைந்துள்ளது விசிக கட்சிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
