தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று சற்று முன் இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கூடும் இந்த பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
