தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 1,785 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ரயில்வேயில் பணி புரிய விரும்பும் தேர்வர்கள், இந்த அப்ரெண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தேசிய அல்லது மாநில தொழிற்பயிற்சிக் கவுன்சில் (NCVT/SCVT) வழங்கிய ITI தேர்ச்சிச் சான்றிதழும் கட்டாயம்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, 01.01.2026 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். அதைத் தொடர்ந்துச் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். பெண்கள் மற்றும் பிற பிரிவினருக்குக் கட்டணம் இல்லை. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrcser.co.in இல் ஆன்லைன் மூலமாக டிசம்பர் 17, 2025க்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
