ஹரியானாவை சேர்ந்த சுஹாத் சிங் என்ற எண்பது வயது முதியவர் ஒருவர் ஸ்கை டைவிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 80 வயதில் 15 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசத்தை செய்த அவரின் செயல் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஸ்கை டைபிங் சாகசத்தை செய்வதற்கு முன்பு அவர் சிரித்தது முதல் மேகங்களை தொட்ட பிறகு நான் தைரியத்தை கண்டேன் என்று சொல்வது என அனைத்து தருணங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்வம், தைரியம் மற்றும் சிறிது பைத்தியக்காரத்தனம் ஆகியவை வயதை பொருட்படுத்தாமல் மனதை இளமையாக வைத்திருக்கும் என்பதற்கு இந்த ஒரு வீடியோ தான் உதாரணம். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
