காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு ஷாக்… தமிழகத்தில் விலை கிடுகிடு உயர்வு…!

By Nanthini on கார்த்திகை 23, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை ஏற்ற இறக்கத்தோடு இருந்து வந்தது. கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது மழைப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலையை தொடர்ந்து பச்சை காய்கறிகளின் விளையும் தற்போது அதிகரித்துள்ளது. தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதனைப் போல சாம்பார் வெங்காயம், கிலோ 80 ரூபாய் வரையும், கத்திரிக்காய் 50 முதல் 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதா இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.