தமிழகத்தின் சிறிய தேநீர் கடைகளில் இருந்து பெரிய ரெஸ்டாரண்டுகள் வரை அனைத்து உணவகங்களும் உணவு பரிமாறும் பணிகளிலும் ஈடுபடும் ஊழியர்கள் கட்டாயமாக குடல் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. உணவகத்தில் உணவை தயாரிக்கும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சமைப்பது அல்லது பரிமாற செய்தால் தொற்றுநோய் உணவு மூலம் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பதால் முழு மாநிலத்தையும் உள்ளடக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் காய்ச்சல் மற்றும் தொற்று பரவுவதாக மக்கள் மத்தியில் புகார் எழுந்தது. உணவை நேரடியாக கையாளும் ஊழியர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது உணவை தொடங்கியவுடன் பலருக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் இந்த உத்தரவு பொது சுகாதாரத்தை காக்கும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. உணவக உரிமையாளர்கள் தங்களுடைய கடையை நடத்த உணவு பாதுகாப்பு லைசென்ஸ் கட்டாயம் பெற வேண்டும்.
உணவக ஊழியர்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவு சமைக்கும் போதும் பரிமாறும் போதும் கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாகும். ஒவ்வொரு ஊழியரும் தடுப்பூசி செலுத்துவதற்கான செலவு 500 ரூபாயை உணவக உரிமையாளர்கள் வழங்க வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகு ஒவ்வொரு ஊழியருக்கும் தனிப்பட்ட மருத்துவ சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வுகளில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
