காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்த சாருமி (15) என்ற சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருடன் வீட்டிலிருந்து உள்ளார். இதனிடையே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே சிறுமியை காணவில்லை என்று போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் நல்லூரை சேர்ந்த ரவுடி நவமணியை கைது செய்து விசாரித்தனர். அப்போது சிறுமியும் நவமணியும் காதலித்து வந்த நிலையில் காதலன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சோமங்கலம் பகுதிக்கு அடுத்துள்ள ஏரியாவில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் சிறுமியுடன் பலமுறை அவர் தனிமையில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நவமணியை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த நவமணி மீண்டும் சிறுமியுடன் பழகியுள்ளார். இதனால் சிறுமி அடிக்கடி காதலன் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே சிறுமியின் பெற்றோர் ரவுடி நவமணியிடம் தன்னுடைய மகள் பழகி வருவதை கண்டித்து அடித்துள்ளனர்.
இதனால் சிறுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்நிலையில் வழக்கம் போல நவமணி வீட்டுக்கு சென்ற சிறுமி அங்கு ஆட்கள் இல்லாததை அறிந்து வீட்டில் உள்ள அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் நவமணியின் குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
