வீட்டை வைத்து லோன் வாங்கி படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா… “மாஸ்க்” ரிசல்ட் பார்த்த பிறகு கவின் சொன்ன வார்த்தை…!!

By Devi Ramu on கார்த்திகை 22, 2025

Spread the love

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில், கவின் மற்றும் ஆண்ட்ரியா முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்க்’ ஆண்ட்ரியாவும் அவரது மேலாளர் எஸ்.பி. சொக்கலிங்கமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, வெற்றிமாறன் படைப்பு ஆலோசகராகச் செயல்பட்டு வழங்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘மாஸ்க்’ திரைப்படத்தின் முதல் நாள் சுமார் 1 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடிகையும் படத்தின் இணைத் தயாரிப்பாளருமான ஆண்ட்ரியா, “நான் தயாரிப்பாளராக ஆக, சினிமாவில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீட்டை வைத்துக் கடன் பெற்றேன்; சினிமாவில் சம்பாதித்த பணத்தைச் சினிமாவிலேயே முதலீடு செய்கிறேன்.

   

‘மாஸ்க்’ படம் போட்ட முதலீட்டைத் திரும்ப எடுத்தால், நான் நடித்துள்ள ‘பிசாசு 2’ திரைப்படத்தை நானே துணிந்து வெளியிடுவேன். அது என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம்” என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் கவின், “மாஸ்க் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனப் பதிலளித்துள்ளார்.