SHOCKING VIDEO: பள்ளிக்குள் ஓடும்போது டாக்ஸி கீழ் தவறி விழுந்த சிறுவன்… மயிரிழையில் உயிர் தப்பியது எப்படி..? திக் திக் வீடியோ…!!

By Soundarya on கார்த்திகை 22, 2025

Spread the love

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளி மாணவன் பள்ளிக்கு ஓடும்போது வழுக்கி விழுந்து ஒரு டாக்ஸி மோதி உயிர் தப்பிய அதிர்ச்சி காட்சி  சிசிடிவியில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், குழந்தை தனது சகோதரியுடன் சொசைட்டி கேட் நோக்கி ஓடுவதைக் காட்டுகிறது, அப்போது திடீரென அவர் வழுக்கி விழுந்தார்.

அப்போது டாக்ஸியின் முன் சக்கரம் அவர் மீது ஏறியது, ஆனால் சிறுவன் பலத்த காயமின்றி உயிர் தப்பினார். முன்னால் சென்று கொண்டிருந்த அவரின் சகோதரி டாக்ஸியை விரைவாக நிறுத்திய போது சிறுவன் காரின் கீழிருந்து வெளியே வந்தார். இந்த சம்பவத்தை பார்த்ததும் அங்கிருந்த பலரும் ஓடி வந்தார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.