புதிய கட்சியில் இணையும் முன்னாள் நாதக நிர்வாகி காளியம்மாள்..? அரசியலில் பரபரப்பு…!!

By Soundarya on கார்த்திகை 22, 2025

Spread the love
பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்ற உலக மீனவர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் நாதக நிர்வாகி  காளியம்மாள், தமிழகத்தில் திராவிட கட்சிகள் மீனவர்களை புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் சுனாமி வீடுகள் புதுப்பிக்கப்படாததையும், மீனவர்கள் அப்புறப்படுத்தப் படுவதையும் கண்டித்தார்.
மேலும், இனிமேல் வரும் நாள்களில் மீனவர் அமைப்புகளை ஒன்றாக இணைத்து அவர்களின் நலனுக்காக புதிய அமைப்பு அல்லது ஏதாவது கட்சியில் இணைந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் காளியம்மாள் எந்த கட்சியில் இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.