“நோயாளிகளுக்கு சிகிச்சை…” டாக்டரை பார்த்து ஆடிப்போன அதிகாரிகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 22, 2025

Spread the love

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஜே. கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில், நேஹா கிளினிக் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (56) என்பவர், தன்னைப் மருத்துவர் என்று கூறிக்கொண்டு, அங்குக் கிராம மக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

முத்துலட்சுமி மருத்துவர் இல்லை என்றும், போலியாகக் கிளினிக் நடத்தி வருவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், கோவை மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநரின் உத்தரவின் பேரில், சூலூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

   

இந்த ஆய்வின்போது, முத்துலட்சுமி மருத்துவம் படிக்காதவர் என்பதும், நர்சிங் படிப்பு மட்டும் படித்துவிட்டு, அதன் அனுபவத்தைக் கொண்டு சிகிச்சை அளித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்த வைத்திருந்த ஊசிகள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

   

மேலும், அந்தக் கிளினிக்கையும் இழுத்து மூடினர். இதுகுறித்துச் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி மருத்துவராகச் செயல்பட்ட முத்துலட்சுமியை அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.