தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் கட்சி தாவலில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் கடலூர் மாவட்ட பாஜக விவசாய அணியின் துணைத் தலைவர் செல்வராசு, அந்த கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், அவருடைய ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டார்கள்.
