முத்தம் என்பது தம்பதியினர் தங்களின் அன்பை பரிமாறி கொள்ள கொடுத்துக்கொள்கிறார்கள். முத்தத்தால் பல்வேறு நன்மைகள் உள்ளது என்றும் இதனால் தம்பதிகளுக்கிடையே நல்ல புரிதல், இணக்கம் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது .இருப்பினும் ஒரு தம்பதியினர் 10 வினாடிகள் முத்தமிட்டால், அவரின் துணைவர் 80 மில்லியன் வாய்வழி பாக்டீரியாக்களை மற்றொருவருக்கு மாற்றுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கண்டுபிடிப்பு 21 ஜோடிகளின் ஆய்வின் அடிப்படையில் அமைந்தது.
நமது உடலில் 100 டிரில்லியன் நுண்ணுயிரிகள் இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. நமது வாயில் சுமார் 700 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. இது நமது துணை, மரபியல், உணவுமுறை மற்றும் வயதைப் பொறுத்து மாறுபடும். உடலின் நுண்ணுயிரிகள் உணவை ஜீரணிக்கவும், ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தவும், நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் உதவுகின்றன .ஆராய்ச்சியாளர்கள் ஒரு தம்பதிக்கு ஒரு சிறப்பு புரோபயாடிக் பானத்தைக் கொடுத்து, பின்னர் தங்கள் துணையை முத்தமிடச் சொன்னார்கள். இந்த பானத்தில் லாக்டோபாகிலஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் இருந்தன. முத்தத்திற்குப் பிறகு, பெறும் துணையின் உமிழ்நீரில் இந்த குறிப்பிட்ட பாக்டீரியாக்களின் அளவு மூன்று மடங்கு ஆய்வு செய்யப்பட்டது. 10 வினாடி முத்தம் 80 மில்லியன் பாக்டீரியாக்களை அறிமுகப்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வு மற்றொரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது. சராசரியாக, பெண்களை விட ஆண்கள் தங்கள் துணையை அதிகமாக முத்தமிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்களில் சுமார் 74 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது முத்தமிடுவதாகவும், பெண்கள் 5 முறை முத்தமிடுவதாகவும் தெரிவித்தனர். இது ஆண்களின் நுண்ணுயிரிகள் பெண்களுக்கு கடத்தப்படுவதற்கான அதிக வாய்ப்பைக் குறிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்பது முறையாவது முத்தமிடும் தம்பதிகளின் உமிழ்நீரில் ஒரே மாதிரியான பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆராய்ச்சியில் சொல்லப்படுகிறது. இது அவர்களின் உமிழ்நீருக்கு இடையிலான ஒற்றுமையை அதிகரிக்கிறதாம்.
