“லேசா தான் காயம் ஏற்படும்னு நினச்சேன்” ஆசிரியர்கள் டார்ச்சரால் தீ குளித்த மாணவி… இறப்பதற்கு முன் சொன்ன கண்கலங்க வைக்கும் வாக்குமூலம்…!!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடையை சேர்ந்தவர் சக்திவேல் குமரன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கூலி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். சக்திவேல் குமரன் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். கடந்த சில தினங்களாக அவர் திண்டுக்கலில் தங்கி விருந்து வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பத்தாம் தேதி அன்று அவர் வேலைக்கு சென்று விட்டார். இரண்டு சகோதரிகளில் ஒருவரை அவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென்று மாணவி உடலில் தீப்பற்றி எரிந்து காயம் ஏற்பட்டதால் அலறியுள்ளார்.

இதையடுத்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.    ஆனால் மாணவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து  மாணவியின் பெற்றோர் ஆசிரியர்களின் கொடுமை தாங்காமல் மாணவி உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்கள். இதுகுறித்து மாணவியின் தந்தை கூறுகையில், “என் மகள் வால்பாறை ரொட்டி கடையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியர்  ஒருவர் என்னுடைய மகளை மற்ற மாணவர்களின் முன்பாக பேசி அவமானப்படுத்தியது அவளுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

   

இரண்டு நாள் விடுமுறை எடுத்துவிட்டு மீண்டும் பள்ளி சென்றபோது எதற்காக விடுமுறை எடுத்தாய் காய்ச்சலா? என்று கேட்டு என் மாணவி என் மகளை கன்னத்தில் அடித்துள்ளார். ஆசிரியர்கள் தொடர்ந்து செய்த டார்ச்சரால் தான் என் மகள் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து  விசாரணை செய்த போலீசார் மூன்று ஆசிரியரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இறப்பதற்கு முன் மாணவி அளித்துள்ள வாக்குமூலத்தில், “ஆசிரியர்கள் என்னுடைய பெற்றோரிடம் என்னைப் பற்றி புகார் செய்தார்கள். அதனால் அச்சமடைந்து மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ குளித்தேன். உடலில் காயம் இருந்தால் அம்மா என்னை கண்டிக்காமல் விட்டுவிடுவார் என்று கருதினேன். காயம் சிறிய அளவில்  இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த அளவிற்கு ஏற்படும் என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவியின் இந்த வாக்குமூலம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.