திடீர் திருப்பம்… “விஜய் எங்க வீட்டுப் பிள்ளை, நான் போய் எப்படி அவர”…. சற்றுமுன் பிரேமலதா பரபரப்பு பேட்டி…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர்தான் விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் தலைவராகவும் தற்போது மாறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் இரண்டு மாநாடுகளையும் நடத்தி காட்டி உள்ளார். அந்த இரண்டு மாநாடுகளிலும் பல லட்சம் பேர் கலந்து கொண்டது பேசு பொருளானது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்து வருகின்றார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று தான் விஜய் தொடர்ந்து பேசி வருகின்றார்.

அதேசமயம் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை விஜய் வெளியிடவில்லை. அதிமுக போன்ற கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைப்பதை அவருக்கும் அவரின் அரசியல் எதிர்காலத்திற்கும் நல்லது என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் கரூர் சம்பவத்திலிருந்து இப்போதுதான் விஜய்யும் கட்சியும் மீண்டு வருகிறது. வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி விஜய் மீண்டும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

   

இந்நிலையில் தேமுதிக கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இங்கு யாரும் எடுத்தவுடனே வந்துவிட முடியாது, நேற்று முளைத்த காளான் எல்லாம் இங்கு எடுபடாது, அது ஒரு நாள் மழைக்கே தாங்காது என்றெல்லாம் பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று முளைத்த காளான் என்று பிரேமலதா சொன்னது விஜயை மனதில் வைத்து தான் என்ற ஊடகங்களில் செய்தி பரவ தொடங்கியது.

   

தற்போது இதை மறுத்துள்ள பிரேமலதா, நேற்று முளைத்த காளான் என நான் விஜயை குறிப்பிடவில்லை, அவர் எப்போதுமே எங்க வீட்டுப் பிள்ளை, விஜய்க்கு எப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இல்லை. சினிமாவைப் போல அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என பிரேமலதா கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு விஜய்க்கு ஆதரவாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.