பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொளிக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். பீகாரில் NDA கூட்டணி யாரும் எதிர்பார்க்காத அளவு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணி தற்போது தமிழகத்தில் நடைபெறப் போகும் தேர்தலுக்காக திராவிட கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை நோக்கி இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.
இப்படியான நிலையில் பீகாரில் வெற்றி பெற்ற பாஜக தற்போது தமிழக தேர்தலிலும் தீவிர முனைப்பை காட்டி வருகிறது. அதன்படி அதிமுகவிடம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதிலும் முக்கியமாக கொங்கு மண்டலத்தை அதிமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என பாஜக உறுதியாக உள்ளதாம். பாஜகவிற்கு அதிமுகவின் கோட்டையாக கருத கருதப்படும் கொங்கு மண்டலத்தை கொடுத்தால் அந்த பகுதியில் அதிமுக தோல்வியை தான் சந்திக்கும்.
அதிமுகவின் வாக்கு வங்கி தற்சமயம் பெரிய தொடங்கி இருப்பதால் அது கொங்கு மண்டலத்தில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இப்படியான சூழலில் கொங்கு மண்டலத்தை பாஜகவிற்கு ஒதுக்குவது சரியான முடிவு கிடையாது என்றும் இபிஎஸ் யோசிக்கிறாராம். பீகாரில் வெற்றி பெற்றதை பகடை காயாக வைத்து பாஜக அதிமுகவிடம் சில நிபந்தனைகள் முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு இபிஎஸ் சம்மதிக்கவில்லை என்றால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பெரிய நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி தற்போது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
