இனி வில்லங்க சான்று போல பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்… தமிழக அரசு கொண்டு வரும் புதிய நடைமுறை…!!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

முன்பெல்லாம் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அந்த பிரச்சினை எல்லாம் தற்போது தீர்ந்துவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலமாக பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதேபோல இப்போது பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கும் உடனடி பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் விதமாக தமிழக அரசின் வருவாய்த்துறை புதிய ஆன்லைன் வசதி அறிமுகம் செய்ய உள்ளது.

அதில் ஒரு சொத்தின்  உரிமையாளர் யார்? அவருடைய பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இருந்து சொத்து அடமானத்தில் உள்ளதா? அதில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளது ? என்பதற்கான முழு விவரத்தையும் பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலமும், பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

   

ஆனால் பட்டாவில் பத்திரப்பதிவு வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் தமிழக அரசு அதற்கு தீர்வு காணும் விதமாக தற்போது பட்டா வரலாறு என்ற புதிய சேவை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது.